(Star India estimated ad revenue IPL 2018)
இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தை பெற்றிருந்த ஸ்டார் இந்தியா நிறுவனம் விளம்பரத்தின் ஊடாக பெற்றுக்கொண்ட இலாப தொகை எவ்வளவு என்பதை எக்ஸ்சேஞ் 4 மீடியா என்ற வணிக இணையத்தளம் நேற்று வெளியிட்டுள்ளது.
ஐ.பி.எல். இறுதிப்போட்டியை ஸ்டார் இந்தியா நிறுவனத்தின் உத்தியோகபூர்வ காணொளி இணையத்தளமான ஹொடஸ்டாரில் மாத்திரம் ஒரே நேரத்தில் சுமார் 10 மில்லியன் பேர் நேரடியாக பார்த்துள்ளனர். இணையத்தளம் ஒன்றில் 10 மில்லியன் பேர் நேரடி ஒளிபரப்பை பார்த்த முதல் சந்தர்ப்பமும் இதுவாகும்.
இதன்படி ஐ.பி.எல். தொடருக்கான விளம்பரத்தின் ஊடாக மாத்திரம் சுமார் 1900-2000 கோடி ரூபா வருமானத்தினை ஸ்டார் இந்தியா நிறுவனம் பெற்றுள்ளது. இதில் 300-350 கோடி ரூபா ஹொட்ஸ்டாரின் மூலமாக கிடைக்கப்பெற்றுள்ளது.
ஸ்டார் இந்தியா நிறுவனம் போட்டி ஆரம்பிக்கும் முன்னர் தங்களது இலக்கு 2000 கோடியை இலாபமாக பெருவது என அறிவித்திருந்தது. அதேபோன்று கிட்டத்தட்ட குறித்த இலக்கை ஸ்டார் இந்தியா நிறுவனம் நெருங்கியுள்ளது.
இதேவேளை ஐ.பி.எல். தொடரை கடந்த வருடம் நேரடியாக ஒளிபரப்பியிருந்த சோனி நிறுவனம் கடந்த வருடம் 1300 கோடிகளை இலாபமாக பெற்றிருந்தது என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
- வெற்றியுடன் பிரென்ச் ஓபனை ஆரம்பித்தார் செரீனா!
- இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் தொடர் : அறிவிக்கப்பட்டது மே.தீவுகள் அணிக்குழாம்!
- முரளிதரனை தலைகுணியசெய்த சம்பவம்! : காலம் கடந்து வெளியானது உண்மை!!!
- புதிய தலைமை பயிற்றுவிப்பாளரை நியமித்தது அவுஸ்திரேலியா
- இலகு வெற்றியுடன் காலிறுதிக்கு தகுதிபெற்றார் தத்ரா சில்வா
- திரில் வெற்றியுடன் சம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் லிவர்பூல்!
- சென்னையில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்குமா கொல்கத்தா!
- கொல்கத்தாவை மிரள வைத்த ரஷீட் கான்!!! : சென்னையுடன் இறுதிப்போட்டியில் ஹைதராபாத்!!!
<<Tamil News Group websites>>
Star India estimated ad revenue IPL 2018