கனடாவில் படுகொலைசெய்யப்பட்ட தமிழ் மாணவனின் சோகப் பின்னணி

0
842
Canada Tamil Boy Venojan Murder

Canada Tamil Boy Venojan Murder

ஸ்கார்போரோவில் கொலைசெய்யப்பட்ட தமிழ் இளைஞன் தொடர்பில் அவரது குடும்பத்தினர்கள்  நண்பர்கள் மற்றும் அவர் வேலைப்பார்த்த இடத்தின் முதலாளி ஆகியோர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

வினோஜன் சுதேசன் மிகவும் நல்ல ஒரு இளைஞன் எனவும், கடும் முயற்சியாளர் எனவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

21 வயதான வினோஜன் சுதேசன் என்ற யோர்க் பல்கலைக்கழக மாணவன், தாக்கப்பட்டு, கொலைசெய்யப்பட்டுள்ளான்.

Pearson கல்லூரிக்கு அருகாமையில் இவரது உடல் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டது.

உணவகம் ஒன்றில் இரவுக் கடமையை முடித்து விட்டு, உடற்பயிற்சிக் கூடத்துக்குச் சென்று விட்டு திரும்பிய போது, இவர் சுடப்பட்டிருந்தார்.

குறித்த மாணவனிடம், கொள்ளையடித்த பின்னர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குறித்த மாணவன் வரும் வரை காத்திருந்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  இக்கொலைச் சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்தச் சம்பவம் தம்மை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியுள்ளதாகவும், அதிர்ச்சியையும் அளித்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அவர் எப்போதும் நேர்மறையான எண்ணம் கொண்டவர் எனவும், அவருக்கு சிறப்பான எதிர்காலம் காத்திருந்ததாகவும் உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து அவர் கடமை புரிந்த கடையின் உரிமையாளர் கருத்து தெரிவிக்கும்போது, சுதேசன் கடந்த 5 வருடங்களாக அங்கு கடமையாற்றியதாகவும், இவ்வாறானதொரு கொடுமை நடக்கும் உலகின் கடைசி நபராக அவர் இருக்கவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

அவர் மிகுந்த பாசமானவர் எனவும், இப்படியொரு அப்பாவியான அன்பான நபர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனது குடும்பத்துக்கு உதவி செய்யும் பொருட்டும், தனது செலவுகளை தானே பார்த்துக்கொள்ளும் பொருட்டும் , நல்ல கல்விக்காகவும், வார இறுதி நாட்களிலும், வாரநாட்களில் இரவும் தமது இடத்தில் வேலை செய்து வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.