ஓட்டுனர் இல்லா பஸ்களை வழிநடத்தும் போக்குவரத்து சமிஞ்சை விளக்குகள்

0
524
Intelligent traffic lights guide driver-less buses, Intelligent traffic lights guide driver-less, Intelligent traffic lights guide, Intelligent traffic lights, traffic lights guide driver-less buses, Tamil Swiss news, Swiss Tamil news

(Intelligent traffic lights guide driver-less buses)

சுவிஸ் நகரமான சீயோனில் செயல்படும் ஒட்டுனர் இல்லா பஸ் சேவை ஒரு புதிய கட்டத்தினுள் நுழைகிறது. அறிவார்ந்த போக்குவரத்து விளக்குகளுக்கு தான் நன்றி தெரிவிக்க வேண்டும், SmartShuttles ர்னப்படும் இவ்வகை பஸ்கள் ஒரு ஓட்டுனரின் உதவியின்றி சந்திகளை கடக்க முடியும்.

ஆரம்பத்தில், டிசம்பர் 2015 இல் தொடங்கப்பட்ட முன்முயற்சியின் ஒரு பகுதியாக the Old Town வழியாக 1.5 கி.மீ. (0.9 மைல்) பாதை வழியே 11 பிரயாணிகளைக் கொண்டு இரண்டு பிரகாசமான மஞ்சள் நிற தானியங்கி பஸ்கள் சென்றது. உலகிலேயே முதன்முதலில் ஒரு ஓட்டுனர் இல்லாமல் ரோபோ தொழில்நுட்பத்தைக் கொண்டு இந்த பஸ்கள் இயக்கப்பட்டது.

திங்களன்று நகர அதிகாரிகள் அடுத்தகட்ட கண்டுபிடிப்பை அறிவித்தனர்: இவ்வகை பஸ்கள் இப்போது அதிக போக்குவரத்து நெரிசலைக் கையாளுவது மட்டுமல்லாமல் இரண்டு தெருக்களையும் கடக்கிறது. அவற்றை பாதுகாப்பாகச் செயல்படுத்த, அடுத்த சில நாட்களில் இரண்டு நுண்ணறிவு போக்குவரத்து விளக்குகள் அமைக்கப்படவுள்ளது.

சுவிட்சர்லாந்தில் முதல் தடவையாக பயன்படுத்தப்படுகிற புதிய ஐரோப்பிய தரநிலையைப் பின்பற்றுகின்ற ஒரு வயர்லெஸ் லோக்கல் ஏரியா நெட்வொர்க் (WLAN) வழியாக பேருந்து மற்றும் விளக்குகள் இடையே தொடர்பு ஏற்படுத்தப்படும். பஸ் அதன் வேகத்தை சரிசெய்ய அனுமதிப்பதன் மூலம் விளக்குகள் நிறம் மற்றும் தன்மையை மாற்றும் போது ஒவ்வொரு வினாடிக்கும் ஒரு சிக்னல் பெறுகிறது.
இவ்வாகனங்களின் அடுத்த நோக்கம், சுற்றுவட்டங்களை (roundabouts) சமாளிப்பது ஆகும். இதன் சோதனை ஓட்டம் வரவிருக்கும் மாதங்களில் தொடங்கும்.

Intelligent traffic lights guide driver-less buses, Intelligent traffic lights guide driver-less, Intelligent traffic lights guide, Intelligent traffic lights, traffic lights guide driver-less buses, Tamil Swiss news, Swiss Tamil news

Tamil News Groups Websites