தமிழீழ பாடல்களை ஒலிக்கவிட்டு யாழ். பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம்

0
732
Thoothukudi massacre Protest Jaffna University

(Thoothukudi massacre Protest Jaffna University)
தமிழகம் தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரெட்லைட் ஆலையை மூடக் கோரி போராட்டம் நடாத்தி வரும் தமிழக மக்களுக்கு ஆதரவாக யாழ். பல்கலைகழக மாணவர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர்.

இன்று நண்பகல் 12 மணியளவில் யாழ். பல்கலைகழகம் முன்பாக கூடிய மாணவர்கள் ஸ்ரெட்லைட் ஆலையை மூடக் கோரி பதாதைகளை தாங்கியவாறு, புரட்சி பாடல்கள் மற்றும் தமிழீழ புரட்சி பாடல்களை ஒலிக்கவிட்டு, போராட்டம் நடத்தியுள்ளனர்.

ஸ்ரெட்லைட் ஆலையை மூடக் கோரி தூத்துக்குடியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தினால் 13 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்தனர்.

இந்த நிலையில், குறித்த பொலிஸாரின் செயற்பாட்டைக் கண்டித்தும், குறித்த ஆலையை மூடக் கோரியும் தமிழர் தாயகப் பகுதியான யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Thoothukudi massacre Protest Jaffna University