ஓ.பி.எஸ் தூத்துக்குடி சென்றது கண் துடைப்பு அல்ல” – தமிழிசை!

0
833
ops thoothukudi went eye wipe Tamilisai

ops thoothukudi went eye wipe Tamilisai

“சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தூத்துக்குடி மக்களுக்கு உள்ள பாதுகாப்பு குறித்த அச்சத்தை போக்க வேண்டும் என்றும், அந்த மாவட்ட மக்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.

போராட்டம் திசைமாறி செல்லும் வீடியோ காட்சிகளை காவல்துறை வெளியிட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ள தமிழிசை, போராட்டக்காரர்கள் அரசு பேருந்துகளுக்கு தீ வைப்பது, தாக்குதல் நடத்துவது கண்டனத்துக்குரியது என்றும், போராட்டக்காரர்கள் தமிழகத்தின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்துக்கொள்வதாகவும் குற்றம்சாட்டினார். தூத்துக்குடி போராட்ட சம்பவத்தில் உளவுத்துறை தோல்வி அடைந்துவிட்டதாகவும் தமிழிசை விமர்சித்தார்.

எதிர்கட்சிகள் இயல்பாக நடக்கும் எல்லாவற்றையும் அரசியலாக மாற்றி தமிழகத்தை போராட்ட களமாக மாற்றுவதையே வேலையாக கொண்டிருப்பதாகவும், தமிழகத்தின் ஆக்கப்பூர்மான நடவடிக்கைகளில் எதிர்க்கட்சிகள் ஈடுபட வேண்டும் என்றும் தமிழிசை கேட்டுக் கொண்டார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தூத்துக்குடி சென்றுள்ளது கண்துடைப்பு இல்லை என்றும் அவர் அங்கு சென்றது ஆரோக்கியமானது என்றும் அவர் கூறினார்.

More Tamil News

Tamil News Group websites :