உலகக்கிண்ண போட்டிகளில் விளையாடுவாரா முகமது சலாஹ்?

0
622
mohamed salah injury update news Tamil

(mohamed salah injury update news Tamil)

லிவர்பூல் அணியின் முன்னணி வீரர் முகமது சலாஹ் உலகக்கிண்ண போட்டிகளில் விளையாடுவதில் சந்தேகம் எழுந்துள்ளது.

லிவர்பூல் மற்றும் ரியல் மெட்ரிட் அணிகளுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் ரியல் மெட்ரிட் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றிருந்தது.

இந்த போட்டியில் விளையாடிய லிவர்பூல் அணியின் முன்னணி வீரர் சலாஹ், ரியல் மெட்ரிட் வீரர் சேர்ஜியோ ரெமோஸுடன் மோதி விழுந்ததில் அவருடைய தோற்பட்டையில் பலத்த உபாதை ஏற்பட்டது.

இதனால் மைதானத்திலிருந்து சலாஹ் வெளியேறினார். இந்நிலையில் உலகக்கிண்ண போட்டிகள் அடுத்தமாதம் நடைபெறவுள்ள நிலையில் சலாஹ் எகிப்து அணிக்காக விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்திருந்தது.

இதுதொடர்பில் சலாஹ் தனது டுவிட்டர் பக்கத்தில், ”உலகக்கிண்ணத்தில் விளையாடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. உங்களது அன்பும் ஆதரவும்தான் எனக்கு பலம் தரும் ” என பதிவிட்டுள்ளார்..

சலாஹ் இந்த சீசனில் 44 கோல்களை லிவர்பூல் அணிக்காக அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

<<Tamil News Group websites>>

mohamed salah injury update news Tamil