இன்று முதல் மழை குறைவடையும் : 11 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

0
571
Floods receding risks remain DMC

(Floods receding risks remain DMC)
நாட்டில் மழைவீழ்ச்சி குறைவடையும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளபோதும், எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு 11 மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இரத்தினபுரி, கேகாலை, கண்டி, மாத்தளை,நுவரெலியா,பதுளை, களுத்துறை, காலி, குருணாகல், கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை நீடிக்கப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

தற்சமயம் நாட்டில் நிலவும் மலையுடனான காலநிலை இன்று முதல் குறைவடையும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இதேவேளை, கம்பஹா கல்வி வலையத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் நாளைய தினம் மூடப்படுவதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக குறித்த கல்வி வலையத்திற்கு உட்பட்ட பல வீதிகள் தொடர்ந்து நீரில் மூழ்கியுள்ளதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 450க்கும் அதிகமான குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரம் பேர் வரையில் பாதிக்கபட்டுள்ளனர்.

மேலும், சீரற்ற காலநிலையினால் நுவரெலியா மாவட்டத்தில் 97 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதோடு, 5 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, மலையகத்தில் வெள்ளம் மற்றும் மண்சரிவில் பாதிக்கபட்ட அனைத்து மக்களுக்கும் வீடுகள் அமைத்து கொடுக்கப்படும் என அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் அவர், வெள்ளம் மற்றும் மண்சரிவில் பாதிக்கப்பட்ட நோர்வூட்,மஸ்கெலியா,கவரவில,மஸ்கெலியா,சாமிமலை, நானுஒயா, லிந்துலை, மடக்கும்புர போன்ற பகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்தார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை