mysterious people set fire state bus pondy
புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு, தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக பேருந்து சென்று கொண்டிருந்தது. புதுச்சேரி அடுத்த கனக செட்டிக்குளம், அருகே வந்த போது, மர்ம நபர்கள் பேருந்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியதை அடுத்து, பயணிகள் அவசர அவசரமாக கீழே இறங்கினர். பின்னர் பேருந்தின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பினர்.
தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள், தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவம் குறித்து காலாப்பட்டு போலீஸார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.
இதற்கிடையே தமிழக அரசு பேருந்து கொளுத்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி விசாரணை நடத்தினார். பேருந்தை கொளுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்று கூறிய நாராயணசாமி, அமைதி மாநிலமான புதுச்சேரியில் வன்முறைக்கு இடமில்லை என்றார்.
More Tamil News
- மீண்டும் இணைய சேவை தொடங்கியது!
- உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரண தொகை ரூ.20 லட்சமாக உயர்வு – முதல்வர் அறிவிப்பு!
- ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு மீது குற்றச்சாட்டு – கனிமொழி!
- மாஜிஸ்திரேட் சம்மனுக்கு உயிரிழந்தோரின் உறவினர்கள் நிபந்தனை!
- முக்கிய அரசியல் தலைவர்களின் டயட் பிளான்!