Ottawa Reading Room Abuse
ஒட்டாவாவில் சமய நிலையமொன்றில் பெண்ணொருவர் சுயநினைவற்ற நிலையில் காணப்பட்ட சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மிகவும் மோசமாக தாக்கப்பட்டு, இரத்தம் வடிந்த நிலையிலேயே குறித்த பெண் கண்டுபிடிக்கப்பட்டார்.
அவர் குறித்த சமயநிலையத்தின், நூலக பராமரிப்பாளர் என தெரிவிக்கப்படுகின்றது. அவர் 59 வயதானவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அப்பெண் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருக்கலாம் என தாம் நம்புவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர் ஆபத்தான நிலையிலேயே வைத்தியசாலைக்கு ஒண்டு செல்லப்பட்டிருந்தார்.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மேலும் தகவல் தெரிந்தால் தமக்கு அறியத்தரும் படி கோரியுள்ளனர்.
தொலைபேசி இலக்கம்: 613-236-1222, ext. 5493