nature coming back thoothukudi sandeep nanduri
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் 13 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர், இந்த சம்பவத்தால் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகள் கிளம்பியது. இதனை அடுத்து தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், மேலும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் 2வது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டார், அதனைத்தொடர்ந்து, அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக மு.க.ஸ்டாலின் மற்றும் தோழமைக் கட்சியினர், அனைவரையும் கைது செய்யப்பட்டு பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
இதே போன்று தாக்குதலில் காயமுற்று அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக புறப்பட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை காவல்துறையினர் விமான நிலையத்திலேயே கைது செய்தனர், இதனையடுத்து தனக்கு வழங்கப்பட்ட உணவை உண்ணாமல், தொடர் தர்ணா போராட்டத்தில் வேல்முருகன் ஈடுபட்டார்.
இந்த நிலையில் தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பி வருவதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். எனினும் தூத்துக்குடியில் பதற்றம் நிறைந்த பகுதிகளாக கருதப்படும் பிரையண்ட் நகர், அண்ணா நகர், திரேஸ்புரம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர், அப்பகுதிகளில் அடையாளம் தெரியாத நபர்கள் ஊடுருவியதாக வெளியான தகவலையடுத்து, ஆளில்லா விமானம் மூலம் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
More Tamil News
- 26 இந்திய வங்கிகளின் வாராக்கடன் அதிகரிப்பு!
- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
- வங்கியில் கணக்காளருக்கே தெரியாமல் நடந்த பணப்பரிவர்த்தனை!
- சாதனை விளக்க கூட்டங்களை நடத்த பாஜக திட்டம்!
- அரசு பேருந்துக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு!
- சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார் – காடுவெட்டி குரு!
- பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிப்பு!