TamilNadu Livelihood Party leader Velmurugan arrested airport
தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் இடம்பெற்ற கலவரத்தில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூற சென்ற தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனை பொலிஸார் விமான நிலையத்திலேயே தடுத்து கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இடம்பெற்ற கலவரத்தில் காயமடைந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் பார்த்து ஆறுதல் கூறுவதற்காக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் நேற்று விமானம் மூலம் தூத்துக்குடி வாகைக்குளத்திலுள்ள விமான நிலையத்துக்கு சென்றுள்ளார்.
மாலை 3 மணியளவில் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த அவரை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
‘உங்களை உள்ளே அனுமதித்தால் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, நகருக்குள் செல்ல வேண்டாம்” பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
ஆனால் அதை மீறி செல்ல முயன்றதையடுத்து வேல்முருகன் உள்ளிட்ட 9 பேரை பொலிஸார் கைது செய்து புதுக்கோட்டை- சாயர்புரம் சாலையிலுள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.
TamilNadu Livelihood Party leader Velmurugan arrested airport
More Tamil News
- அரசு பேருந்துக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு!
- சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார் – காடுவெட்டி குரு!
- பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிப்பு!
- அஞ்சல்துறை ஊழியர்கள் மொட்டை அடித்து போராட்டம்!
- தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இலவச சட்ட உதவி மையம்!
Tamil News Group websites :