தமிழ் சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்

0
721
Toronto Boy Attacked

Toronto Boy Attacked

ரொரண்டோவில் தாக்குதலுக்குள்ளான தமிழ் சிறுவன் வீட்டில் இருந்தவாறு குணமாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

15 வயதான அட்சுதன் புவீந்திரகுமார் என்ற சிறுவனே அண்மையில் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகியிருந்தார்.

பாசாலையிலிருந்து தனது நண்பருடன் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த போதே இத்தாகுதல் இடம்பெற்றுள்ளது.

பஸ் நிலையத்திலிருந்து அவர்களை பின் தொடர்ந்த நபரொருவரே தாக்குதலை நடத்தியுள்ளார்.

தம் மீது தாக்குதல் நடத்தியவர் யார் என்றோ? ஏன் அவ்வாறு தாக்குதல் நடத்தினார் என்றோ தெரியாதென அச்சிறுவன் தெரிவிக்கின்றார்.

பின்னால் வந்த சந்தேகநபர் , அட்சுதனின் கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளதுடன், அவரது நண்பனையும் நெஞ்சில் குத்த முயன்றுள்ளார்.

உனக்கு என்னவேண்டுமென அம்மாணவர் கேட்டபோது, உன் உயிர்தான் வேண்டுமென அந்நபர் பதிலளித்துள்ளார்.

பின்னர் அங்கிருந்து தப்பியுள்ளார். அவரை பொலிஸார் தேடிவருகின்றனர். அவர் பலருக்கு அச்சுறுத்தலானவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.