மரவள்ளி மரத்தை உண்ட பசுவின் வாலை வெட்டிய கொடூரன்

0
511
Cow's tail cut

(Cow’s tail cut)
தோட்டத்தின் எல்லையிலுள்ள வேலியில் இருந்த மரவள்ளி மரத்தின் இலைகளையும் சில பயிற்றங் கொடிகளையும் உண்ட குற்றத்திற்காக பசுவொன்றின் வால் வெட்டப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எதிர்வீட்டுக்காரினால் வளர்த்து வந்த பசுவின் வாலை வெட்டிய நபரை கடுவலை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்திய போது, விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த பசுவை இறைச்சிக்காக விற்கப்பட்ட போது, இதனை மீட்டு பராமரிப்பதற்காக பால் வியாபாரி ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

புல் மேச்சலுக்காக காலையில் பக்கத்து வீட்டின் அருகில் உள்ள காணியின் மரத்தில் கட்டிவிட்டு சென்ற போது, இந்த பசு வேலி அருகில் இருந்த மரவள்ளி மரத்தின் இலைகளையும் சில செடிகளையும் உண்டுள்ளது.

இதனால் கோபமடைந்த மரவள்ளி மரத்தின் உரிமையாளர் பசுவின் வாலின் ஒரு பகுதியை வெட்டியுள்ளார்.

வேதனையில் துடித்துக்கொண்டிருந்த பசுவை மீட்டு, அதன் பின்னர் பொலிஸில் முறைப்பாடு செய்ததாக பசுவின் உரிமையாளர் தெரிவித்தார்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Cow’s tail cut