இலங்கை கிரிக்கெட் போட்டியாளர்களின் சம்பள தொகை இவ்வளவு அதிகரிப்பா?

0
639
tamilnews Sri Lanka Cricket raise wages national players

(tamilnews Sri Lanka Cricket raise wages national players)

2018 மற்றும் 2019 ஆம் வருடங்களுக்கான இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் வீரர்களின் சம்பளம் 34 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அதிக அளவு இலாபம் அடைந்துள்ளமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

ஒப்பந்த அடிப்படையிலான வீரர்கள் 33 பேரை தவிர டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடும் அனைத்து வீரர்களுக்கான கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்த வீரர்கள் A, B, C, D மற்றும் பிரீமியர் என பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அஞ்சலோ மெத்திவ்ஸ், தினேஸ் சந்திமால், ரங்கன ஹேரத், சுரங்க லக்மால் மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோர் A பிரிவில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

உப்பல் தரங்க மற்றும் தில்ருவன் பெரேரா ஆகியோர் B பிரிவிலும், குசல் மென்டிஸ், நிரோஷன் திக்வெல்ல, தனஞ்சய டி சில்வா, குசல் ஜனித் மற்றும் திஸ்ஸர பெரேரா ஆகியோர் C பிரிவிலும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

மற்றும் D பிரிவில் அகில தனஞ்சய, துஷ்மந்த சாமர, அசேல குணரத்ன, தனுஸ்க குணதிலக்க மற்றும் நுவன் பிரதீப் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை, ‘பிரீமியர் பிரிவில்’ ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்கள் சதீர சமரவிக்கிரம, ரொஷான் சில்வா, லஹிரு திரிமான்ன, லஹிரு கமகே, விஷ்வா பெர்னான்டோ, லக்‌ஷான் சதகன், ஜெப்ரி வென்டர்சே, தசுன் ஷானக, கவுஷல் சில்வா, ஷெஹான் மதுஷங்க, லஹிரு குமார, மலிந்த புஷ்பகுமார, அமில அபோன்சோ, வனிந்து ஹசரங்க, இசுரு உதான மற்றும் தில்ஷான் முனவீர ஆகியோர் உட்படுத்தப்பட்டுள்ளனர்.

(tamilnews Sri Lanka Cricket raise wages national players)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :