உயிரிழப்பு எண்ணிக்கை 9 ஆக உயர்வு – தூத்துக்குடி போராட்டம் கட்டுக்குள் வந்தது

0
943
Several people reportedly injured protests Sterlite Tuticorin

(Several people reportedly injured protests Sterlite Tuticorin)

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிரான போராட்டத்தில் தடையை மீறி போராட்டம் நடத்தியவர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.

இந்த சம்பவத்தில் இளம்பெண் உட்பட 9 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் தமிழரசன், சண்முகம், கிளாஸ்டன், கந்தையா, மணிராஜ், அந்தோணி செல்வராஜ், ஜெயராமன் மற்றும் வெணீஸ்டா ஆகிய எட்டு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஒரு பெண்ணின் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

Image result for tuticorin riot

சுமார் 40 போராட்டக்காரர்கள் காயமடைந்துள்ளதாகவும் மேலும் பலர் காயமடைந்து மோசமான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூடக்கோரி தொழிற்சாலைக்கு மிக அருகில் உள்ள அ.குமரெட்டியபுரம் மக்கள் நடத்திவரும் போராட்டம் 100 வது நாளை எட்டியுள்ள நிலையில், இன்று போரட்டம் தீவிரமடைந்துள்ளது.

மக்கள் அறிவித்துள்ள போராட்டங்களின் காரணமாக, தூத்துக்குடி தெற்கு பொலிஸ் நிலையம், சிப்காட் பொலிஸ் நிலையப் பகுதிகளில் நேற்று (21) இரவு பத்து மணி முதல் நாளை (23) காலை 8 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி சிப்காட்டில் உள்ள ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசுப்படுவதாகவும், நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

Image result for tuticorin riot

இந்த கழிவுகளால் புற்றுநோய் வரக்கூடும் கூறி அ.குமரெட்டியபுரம் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், அ.குமரெட்டியபுரம் கிராம மக்களுக்கு அருகில் உள்ள 10 ஆம் மேற்பட்ட கிராம மக்கள் ஆதரவளித்துள்ள நிலையில், அனைவரும் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக கூறி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

Image result for tuticorin riot

இந்த போராட்டத்துக்கு வியாபாரிகளும், பல்வேறு அமைப்புகளை ஆதரவளித்துள்ளன.

இதனால், இந்தப் பகுதியில் உள்ள பல கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும், இப்பகுதியில் உள்ள மீனவர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

இதேவேளை, தூத்துக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டை கண்டித்து சென்னையிலும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

Image result for tuticorin riot

(Several people reportedly injured protests Sterlite Tuticorin)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :