(27 million rupees allocated need food victims irregular climate dmc)
கடந்த நாட்களில் நிலவிய சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களின் உணவு தேவைக்காக 27 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் அமல்நாதன் தெரிவித்துள்ளார்.
அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள ஆறு மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக முப்படைகளையும் சேர்ந்த சுமார் 5000 வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஜிங் கங்கையின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதால் காலி மாவட்டத்தின் நாகொட, வெலிவிட்டிய, திவித்துர, பத்தேகம, போப்பே, பொத்தல போன்ற பிரதேசங்களில் உள்ள தாழ்நிலங்களும், வீதிகளும் நீரில் மூழ்கியுள்ளன.
அவசர நிலைமைக்கு முகங்கொடுக்கத் தேவையான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் காலி மாவட்ட உதவிப் பணிப்பாளர் தம்பத் ரத்நாயக்க தெரிவித்தார்.
(27 million rupees allocated need food victims irregular climate dmc)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
-
-
- ஒரே நேரத்தில் பலியாகவிருந்த பல பெற்றோர்களும், பிள்ளைகளும் : யாழில் அதிர்ச்சி சம்பவம்
- 15 மாவட்டங்களில் அனர்த்தம் : 8 பேர் பலி : 38 ஆயிரம் பேர் பாதிப்பு
- மர்மமாக காணாமல் போன சீனப் பிரஜை குழிக்குள் : 9 நாட்களுக்கு பின்னர் கண்டுபிடிப்பு
- தாழிறங்கியது ஏ- 9 வீதி : சாரதிகளுக்கு எச்சரிக்கை
- ‘அப்பா” என்று கத்தியவாறு உயிரிழந்த சிறுமி : கொழும்பு புறநகர் பகுதியில் அதிர்ச்சி!
- இலங்கைக்கு ஆபத்தாக மாறியது சீனா : அம்பாந்தோட்டை செயற்கைத் தீவுக்கு உரிமை கோருகிறது சீனா
-