ஏமனில் இருந்து ஹவுத்தி போராளிகளின் ஏவுகணையை தாக்கி அழித்தது சவுதி அரேபியா

0
728
Saudi Arabia attacked killed Houthi fighters Yemen
(Saudi Arabia attacked killed Houthi fighters Yemen)
ஏமன் நாட்டில் பதவி இறக்கம் செய்யப்பட்ட முன்னாள் அதிபரின் ஆதரவாளர்கள் தற்போதைய அதிபர் அப்த் ரப்போ மன்சூர் ஹாதியின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2014-ம் ஆண்டு இந்த கிளர்ச்சியானது ஆயுதப் போராட்டமாக திசைமாறியது.

ஏமன் நாட்டின் அண்டைநாடான ஈரானின் ஆதரவுடனும், அல் கொய்தா தீவிரவாதிகளின் துணையுடனும் உள்நாட்டு ஹவுத்தி புரட்சிப்படையினர் தலைநகர் சனா உள்ளிட்ட பல பகுதிகளை கைப்பற்றி, தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

இந்த பகுதிகளை மீட்பதற்காக சவுதி அரேபியா தலைமையிலான அரபு நாடுகளின் கூட்டமைப்பு படைகள் ஏமன் அரசுக்கு உதவிசெய்து வருகின்றன.

அரசுப் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் நடைபெற்று வரும் உள்நாட்டு சண்டையால் அந்நாட்டில் வசிக்கும் சுமார் 3 கோடி மக்கள் குடிநீர், உணவு, மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், ஏமன் நாட்டில் உள்ள ஹவுத்தி போராளிகள் இன்று சவுதி அரேபியா நாட்டின் தென்பகுதியில் உள்ள ஜஸான் நகரில் உள்ள விமான நிலையத்தின்மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். சவுதி அரேபியா விமானப்படையை சேர்ந்த போர் விமானங்கள் அந்த ஏவுகணைகளை வழிமறித்து தாக்கி அழித்ததாக சவுதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

(Saudi Arabia attacked killed Houthi fighters Yemen)

More Tamil News

Tamil News Group websites :