சென்னையுடன் இரண்டு தோல்விகள்! : பதிலடி கொடுக்குமா சன்ரைசஸ்?

0
615
ipl qualifier 1 Chennai super kings vs Sunrisers Hyderabad

(ipl qualifier 1 Chennai super kings vs Sunrisers Hyderabad)

ஐ.பி.எல். தொடரின் முதலாவது குவாலிபையர் போட்டியில் இன்று சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இன்றைய போட்டியில் வெற்றிபெறும் அணி, நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதுடன், தோல்வியடையும் அணி எலிமினேட்டர் போட்டியில் வெற்றிபெறும் அணியுடன் மோதும்.

இரண்டு அணிகளுக்கும் இடையில் இம்முறை நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் சென்னை அணி 7 மற்றும் 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

அத்துடன் சன்ரைசஸ் அணி ஆரம்பத்தில் தொடர் வெற்றிகளை பெற்றுவந்தாலும், இறுதியாக நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது.

இதனால் இன்றைய போட்டியில் தங்களது தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சன்ரைசஸ் அணி வியூகங்களை வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை அணியை பொருத்தவரையில் துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயற்பட்டு வந்தாலும் பந்து வீச்சில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. எனினும் இறுதியாக நடைபெற்ற பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தியிருந்தது. இதன்படி பார்க்கும் போது சென்னை அணி முழுமையாக தயாராகியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

இதேவேளை இரண்டு அணிகளிலும் இன்றைய போட்டியில் மாற்றங்கள் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத் அணியில் பிராத்வைட்டுக்கு பதிலாக அலெக்ஸ் ஹேல்ஸ் மீண்டும் அணியில் இணைக்கப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை அணியை பொருத்தவரையில் செம் பில்லிங்ஸுக்கு பதிலாக அனுபவ வீரர் பெப் டு பிளசிஸ் இணைக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

<<Tamil News Group websites>>