மசாஜ் நிலையத்தில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

0
2822
Massage Center Canada Montreal

Massage Center Canada Montreal

கனடாவில் , மசாஜ் நிலைய பணிப்பெண்ணுக்கு நேர்ந்த அனுபவம் மற்றும் அதற்கு பொலிஸார் வழங்கிய பதில் ஆகியன பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

மொன்றியலில், மசாஜ் நிலையத்தில் பணிபுரியும் பெண்ணொருவர் தனது வாடிக்கையாளருக்கு உடல் பிடிப்பு சேவையை வழங்கியுள்ளார்.

எனினும் இதன்பின்னர் குறித்த நபர் சுய இன்ப நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண், குறித்த நபரை அங்கிருந்து வெளியேறும்படி கூறியுள்ளார்.

பின்னர் தனக்கு நேர்ந்த அனுபவத்தை நினைத்து அங்கேயே இருந்து அழுதுள்ளார். கடும் மன உளைச்சலுக்கு ஆளான அவர் பின்னர் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று தனக்கு நடந்தவற்றைக் கூறியுள்ளார்.

இதற்கு பொலிஸார் அளித்த பதிலே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அப்பெண்ணுக்கு பொலிஸ் அதிகாரியொருவர் அளித்த பதில் வருமாறு:

” நீங்கள் மசாஜ் சிகிச்சையாளர் ஆக விரும்பினால், இதற்கும் உங்களை தயார் படுத்திக்கொள்ளுங்கள். எனக்கு தெரிந்த ஒருவர் மசாஜ் நிலையம் வைத்துள்ளார். இவ்வாறான விடயங்கள் அங்கு வழமையாக நடப்பதாக அவர் கூறுவார். உங்கள் தொழிலில் இவற்றை எதிர்பாருங்கள். இவற்றுக்கு உணர்ச்சி வசப்படாதீர்கள்,” என்றுள்ளார்.

அவரது பதிலை குறித்த பெண் தனது கைப்பேசியில் பதிவு செய்து வெளியிட்டுள்ளார். இது கனடா காவல்துறை தொடர்பில் பல மட்டங்களில் கேள்வி எழுப்ப வழிசெய்துள்ளது.

பல பொது அமைப்புகளும் கண்டனத்தை தெரிவித்துள்ளன. மேலும் இவ்வாறான பல வழக்குகள் கனடா பொலிஸாரால் கைவிடப்பட்டுள்ளதாகவும், அவற்றை மீண்டும் தூசி தட்டி எடுக்கவேண்டுமெனவும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.