இங்கிலாந்து அணியின் தலைவராக ஹர்ரி கேன்!!! : உத்தியோகபூர்வ அறிவிப்பு

0
475
Harry Kane named England captain Russia 2018

(Harry Kane named England captain Russia 2018)

இங்கிலாந்து உதைப்பந்தாட்ட அணியின் தலைவராக டொட்டென்ஹம் ஹொட்ஸபர் அணியின் முன்னணி வீரர் ஹர்ரி கேன் நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விடயத்தினை இங்கிலாந்து அணியின் பயிற்றுவிப்பாளர் கிரேத் சௌத்கேட் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பிபா உலகக்கிண்ண தொடருக்கான அணி விபரங்களை ஒவ்வொரு நாடுகளும் தொடர்ந்து அறிவித்து வருகின்றன.

இந்நிலையில் முன்னணி அணிகளில் ஒன்றான இங்கிலாந்து அணி தங்களது அணித்தலைவரை சற்றுமுன்னர் அறிவித்துள்ளது.

ஹர்ரி கேன் நடைபெற்று முடிந்த பிரீமியர் லீக் தொடரில் விளையாடி 24 போட்டிகளில் 41 கோல்களை அடித்து சிறந்த வீரராக வலம் வந்துக்கொண்டிருக்கிறார்.

அத்துடன் இங்கிலாந்து அணிக்காக 23 போட்டிகளில் விளையாடி 13 கோல்களை கேன் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

<<Tamil News Group websites>>