யாழில் சினிமா பாணியில் நடந்த சம்பவம் : அச்சத்தால் சிதறியோடிய பயணிகள்

0
1112
jaffna kuppilan bus incident

(jaffna kuppilan bus incident)
ஏழாலை ஊடாக குப்பிளானுக்குப் பயணித்த தனியார் பயணிகள் பஸ் ஒன்றை சில இளைஞர்கள் வழிமறித்து தாக்கியுள்ளனர். இதனால் பஸ்ஸில் பயணித்த பயணிகள் பதற்றத்துடன் சிதறி ஓடியுள்ளனர். இந்தச் சம்பவத்தால் குறித்தப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

யாழ்ப்பாணத்தில் இருந்து ஏழாலை ஊடாக குப்பிளானில் பயணிக்கும் பஸ்ஸின் நடந்துனர் ஒருவருடன் அந்தப் பகுதி இளைஞர் ஒருவர் முரண்பட்டுள்ளார்.

முரண்பட்ட இளைஞர் மேலும் சில இளைஞர்களுடன் மாலை 6.30 மணியளவில் பஸ்ஸை வழி மறித்து நடத்துநரை தேடியுள்ளனர். அந்த நடத்துநர் இல்லாததால் பஸ்ஸின் கண்ணாடியை அடித்து நொறுக்கியுள்ளனர்.

இளைஞர்கள் பயணிகள் பஸ்ஸை அடித்து நொருக்கும் போது பஸ் உள்ளே பயணிகள் இருந்துள்ளனர்.
கண்ணாடிகளை நெருக்கியபோது பயணிகள் பலருக்கு கண்ணாடிச் சிதறல்கள் தாக்கியுள்ளன. அச்சமடைந்த பயணிகள் பஸ்ஸை விட்டுக் குதித்து தப்பியோடினர்.

சாரதி பஸ்ஸை சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு சென்றார். இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை