வாடகை தராததால் மூதாட்டி வீட்டுக்குள் சிறைவைப்பு !

0
625
Godmother locking insaide house chennai kaasimedu

Godmother locking insaide house chennai kaasimedu

சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்தவர் மீன் வியாபாரி ரங்கநாதன் இவரது வீட்டில் பாப்பாத்தி என்ற மூதாட்டி வாடகைக்கு குடியிருந்து வருகிறார், பூ வியாபாரம் செய்து வரும் பாப்பாத்தி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வாடகை பணத்தை சேர்த்து தருவதாக தெரிகிறது, இதனால் ரங்கநாதனுக்கும் பாப்பாதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு பாப்பாத்தியை வீட்டில் வைத்து பூட்டி விட்டு தன்னுடைய வீட்டையும் பூட்டி விட்டு ரங்கநாதன் வெளியூர் சென்றுள்ளார், பாப்பாத்தி காலையில் எழுந்து வந்து பார்த்த போது வீடு வெளியே பூட்டு போட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனே செல்போனில் தனது சகோதரிக்கு தகவல் கொடுத்துள்ளார்.

பிறகு இரவில் இருந்து எதுவும் சாப்பிடாமல் இருந்த பாப்பாத்தி அவரது சகோதரி வருவதற்குள் மயக்கமடைந்துள்ளார் மேலும் பாப்பாத்தி வீட்டிற்கு வந்த அவரது சகோதரி அவர் மயங்கி கிடப்பதை கண்டு காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வீட்டின் பூட்டை உடைத்து மயக்க நிலையில் இருந்த பாப்பாத்தியை மீட்டனர்.

இது குறித்து வீட்டின் உரிமையாளர் ரங்கநாதன் பாப்பாத்தி வீட்டில் இருப்பது தெரியாமல் பூட்டி விட்டு சென்றாரா? அல்லது வாடகை பணம் தராததால் பூட்டி விட்டு சென்றாரா? என்று காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

More Tamil News

Tamil News Group websites :