வன்கூவரில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேர்ந்த கதி

0
687
Vancouver Pregnant Woman Shot

Vancouver Pregnant Woman Shot

வன்கூவரில் இடம்பெற்ற இரு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இருவர் காயமடைந்துள்ளனர்.

31 வயதான கர்ப்பவதியொருவரும், 23 ஆண் ஒருவருமே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.

இத்துப்பாக்கிச் சூட்டில் கர்ப்பவதி மோசமாக காயமடைந்து அபாயகரமான கட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கிச் சூட்டில், பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தை உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெண்ணின் வீட்டுக்கு வந்த இனந்தெரியாத நபரொருவரே துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார்.

அவர் பெண்ணைச் சுட்டுவிட்டு பின்னர் , இளைஞனையும் சுட்டுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். குடும்ப விவாகரமே துப்பாக்கிச் சூட்டின் பின்னணியாக இருக்கலாம் என்ற தகவலையும் மறுப்பதற்கில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.