‘ஏன்ட பிள்ளைய கேவலப்படுத்துறாங்க” : இசைப்பிரியாவின் தாய் கதறலுடன் விடுக்கும் கோரிக்கை

0
3816
Isaipriya mother made request

(Isaipriya mother made request )

இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகப் பிரிவில் பணியாற்றிய இசைப்பிரியாவின் தாயார் வேதரஞ்சினி கண்ணீருடம் தமிழ் மக்களிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

இசைப்பிரியாவின் படம் திரையிட இருந்த நிலையில் அதனை கடந்த இரண்டு வருடங்களாக இசைப்பிரியாவின் குடும்பத்தினர் நிறுத்தியிருந்தனர்.

இந்நிலையில் மீண்டும் அந்த படத்தை திரையிடப் போவதாக திரைப்பட குழுவினர் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பிலேயே இசைப்பிரியாவின் தாயார் கண்ணீருடன் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

இந்த வருடமும் இசைப்பிரியாவின் திரைப்படத்தை திரையிட போவதாக அறிவித்துள்ளார்கள். இசைப்பிரியாவின் கதை என்ற தலைப்பில் திரைப்படத்தை வெளியிடுவதில் எமக்கு விருப்பமில்லை. இசைப்பிரியாவின் பிரச்சினை உலகம் அறிந்த உண்மையாகும். இதை மீண்டும் திரையிட்டு காட்டி விமர்சனத்துக்குள்ளாக்க வேண்டிய தேவை இல்லை.

எனது மகளுக்கு நடந்ததை இன்னும் எங்களால் எண்ணி பார்க்க முடியவில்லை. இதில் மீண்டும் மீண்டும் அவரை படம் போட்டி காட்டி எங்களை வேதனைப்படுத்துகிறார்கள். எனது பிள்ளையை கேவலப்படுத்துகிறார்கள்.

வருசம் வருசம் எங்கட பிள்ளையிட படத்த அங்க போடுறோம். இங்க போடுறோம் என சொல்லி கொண்டு இருக்காங்க. எங்களை திரும்ப திரும்ப வேதனைப்படுத்தி கொண்டு இருக்காங்க. எங்களுக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லை.

இந்தியாவில் வழக்கு போட்டு படத்தை திரையிட தடை செய்தோம். ஆனால் மீண்டும் படத்தை திரையிட முயற்சி செய்கிறார்கள். நாங்கள் துன்பத்தில் இருக்கின்றோம். ஆனால் அவர்கள் எங்கட பிள்ளையிட வாழ்கையை படமாக்கி அதை திரையிட்டு பணத்தை பெற முயற்சி செய்கிறார்கள். வியாபார நோக்கத்திற்காகவே இதை செய்கிறார்கள்.

எங்கட பிள்ளையின் பிரச்சினை எங்களுக்கு தான் தெரியும். ஏற்கனே எனது மகளுக்கு நடந்த துன்பத்தை பார்த்து அதில் இருந்து எழ முடியாமல் இருக்கின்றார். இவர்கள் ஏன் எங்களை மீண்டும் மீண்டும் துன்பப்படுத்துகிறார்கள்.

எனது மகள் ஒரு அமைதியான அடக்கமான பிள்ளை. அவள்ட படத்தை திரையரங்கில் போட்டு காட்டி கேவலப்படுத்துவது எங்கள் குடும்பத்தில் உள்ள யாருக்கும் விருப்பம் இல்லை. தமிழ் மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து இந்த படம் வெளிவராமல் இருக்க உதவ வேண்டும். ஏன்ட பிள்ளையை அவமானம் படுத்தாதிங்கள். இனியும் எந்த துன்பத்தையும் தாங்கும் வலு எங்களிடம் இல்லை.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :

Tags:Isaipriya mother made request ,Isaipriya mother made request