சென்னையில் இடிந்து விழுந்த பால்கனி : பேத்தியை உயிரைக் கொடுத்து காப்பாற்றிய பாட்டி!

0
686
Balcony falling Chennai: Grandma saved grandmother's life

Balcony falling Chennai: Grandma saved grandmother’s life

சென்னை முகப்பேர் கிழக்கை சேர்ந்தவர்கள் நடராஜன் – லட்சுமி தம்பதி, இருவரும் பூ வியாபாரம் செய்து வருகின்றனர், இரண்டு மாடிகள் கொண்ட வீட்டின் முதல் தளத்தில் வாடகைக்கு வசித்து வருகின்றனர், வழக்கம்போல லட்சுமியும் நடராஜனும் வீட்டின் பால்கனியில் உட்கார்ந்து வியாபாரத்திற்காக போ கட்டிக்கொண்டு இருந்தனர், லட்சுமியின் மடியில் அவரது பேத்தி லக்ஷனா அமர்ந்திருந்தார், அப்போது இரண்டாவது தளத்தின் பால்கனி திடீரென இடிந்து விழுந்தது, விபத்தி இருந்து தந்து பேத்தி லக்ஷனாவை காக்க அவரை இறுக்கி அணைத்துக்கொண்டு குனிந்தபடி தம் மீது இடிபாடுகளை வாங்கிக்கொண்டார் லட்சுமி,

சரிந்து விழுந்த இரண்டாவது தளத்தின் பாரத்தை தாங்க முடியாமல் முதல் தளத்தில் இருந்த பால்கனியும் இடிந்து விழுந்தது, அதில் அமர்ந்திருந்த நடராஜன், லட்சுமி மற்றும் அவரது மடியில் அமர்ந்திருந்த குழந்தை லக்ஷனா மூவரும் கீழே விழுந்தனர்,

கீழே விழும்போது லட்சுமி இடிபாடுகளை அவர் மீது தாங்கிக்கொண்டதால் குழந்தை லக்ஷனா சிறிய காயங்களுடன் தப்பினார்,

பேத்தி லக்ஷனாவை கைப்பற்றிய அவரது பாட்டி லட்சுமி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

More Tamil News

Tamil News Group websites :