காவிரி மேலாண்மை வாரிய வழக்கு இந்திய உயர்நீதிமன்றம் இன்று இறுதி உத்தரவு?

0
462
Indian Supreme Court issue final order case Cauvery Management Board

Indian Supreme Court issue final order case Cauvery Management Board

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான வழக்கில் இந்திய உயர்நீதிமன்றம் இன்று இறுதி உத்தரவு பிறப்பிக்கபடுமா என எதிர்பார்க்கப்படுகிறது.

காவிரி நதி நீர் பங்கீட்டை முறைப்படுத்துவது தொடர்பான திருத்தப்பட்ட வரைவு செயல் திட்ட அறிக்கையை இந்திய மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தது.

அதில், ‘மேலாண்மை வாரியம்’ என்பதற்கு பதில் ‘மேலாண்மை ஆணையம்’ என்ற பெயரில் 10 உறுப்பினர்கள் அடங்கிய குழு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நீர் பங்கீடு தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம், மேலாண்மை ஆணையத்திடம் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலாண்மை ஆணையம் முடிவெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டால் மத்திய அரசின் ஆலோசனையை பெறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலாண்மை ஆணையத்தின் தலைமையகம் டெல்லியில் செயல்படும் என்றும் மத்திய அரசு தாக்கல் செய்த திருத்தப்பட்ட வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மத்திய அரசின் திருத்தப்பட்ட வரைவு செயல் திட்ட அறிக்கை குறித்த வாதத்தை கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் இறுதி தீர்ப்பை இன்று அல்லது வரும், 22, 23ஆம் திகதிளில் அறிவிப்பதாக தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து காவிரி வழக்கில் இன்று இறுதி தீர்ப்பு வழங்கபடுமா என்ற எதிர்பார்ப்ப எழுந்துள்ளது. முன்னதாக காவிரி மேலாண்மை வாரியத்தின் பெயரை மாற்றியதற்கு தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Indian Supreme Court issue final order case Cauvery Management Board

More Tamil News

Tamil News Group websites :