கலியுகத்தின் கல்கி அவதாரம் நான் தான்! அதிர்ச்சி கொடுத்த அரச அதிகாரி!

0
593
Indian Government Officer Says He Feels Kalki-Avatar Himself

(Indian Government Officer Says He Feels Kalki-Avatar Himself)

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சர்தார் சரோவர் அணைத் திட்ட நிறுவனத்தில் மேற்பார்வை பொறியாளராக வேலை செய்து வருபவர் ரமேஷ்சந்திரா பெபார்.

இவர் கடந்த சில மாதங்களாக சரியாக அலுவலகத்திற்கு வருவதில்லை. வந்தாலும் தாமதமாகவே வருவாராம். இதனால், அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த நோட்டீசுக்கு பதிலளிக்கும் வகையில் ரமேஷ்சந்திரா செய்தியாளர்களிடம் கூறிய பதில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 2 பக்க விளக்க அறிக்கையை வெளியிட்டு அவர் கூறியதாவது:

நீங்கள் நம்பினால் நம்புங்கள். நான் விஷ்ணுவின் பத்தாவது அவதாரமாக கருதப்படும் கல்கி அவதாரம். நான் வீட்டில் இருந்து தவம் செய்து வருகிறேன். என்னுடைய தவத்தின் பயனால் கடந்த சில ஆண்டுகளாக நல்ல மழை பெய்து வருகிறது.

கடந்த 2010ம் ஆண்டில் தான் நான் கடவுள் அவதாரம் என்பதை உணர்ந்தேன். அப்போது முதல் எனக்கு அதீத சக்திகள் கிடைத்து வந்தன.

நான் கடவுள் அவதாரம் என்பதால் வேலைக்கு வரவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. என்னால் ஆபீசில் உடகார்ந்து தவம் செய்ய முடியவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.

கடந்த 8 மாதங்களில் ரமேஷ்சந்திரா அலுவலகத்துக்கு 16 நாட்கள் மட்டுமே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Photo Source : ancient-origins.net

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்