பாடசாலை மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு – 10 பேர் மரணம்

0
891
tamilnews Santa Fe High School ten students dead shooting

(tamilnews Santa Fe High School ten students dead shooting)

அமெரிக்க – டெக்சாஸ் மாகாணத்தில் சாண்டா பே என்னும் பகுதியில் உள்ள பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டி சம்பவத்தில் 10 பேர் வரை கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி கலாசாரம் தொடர்பான விவாதம் நீண்ட காலமாகவே இடம்பெற்று வருகின்றது.

இளம் மாணவர்கள் கூட துப்பாக்கியை பயன்படுத்தும் நிலை அங்கு ஏற்பட்டுள்ளதுடன், தொடர்ந்தும் அந்த விடயம் விவாத அளவிலேயே உள்ளது.

இதன் ஒருகட்டமாக, டெக்சாஸ் மாகாணத்தில் ஹூஸ்டன் நகருக்கு அருகே உள்ள ஒரு பாடசாலையினுள் திடீரென நுழைந்த மர்ம நபர் அங்கிருந்த மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் 10 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலில் மேலும் பல மாணவர்கள் படுகாயமடைந்ததாகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

சம்பவத்தை அறிந்த பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு வைத்தியவாலைக்கு அனுப்பி வைத்துள்ளதுடன் சந்தேக நபரையும் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் அதே பாடசாலையின் மாணவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்த தகவல்களை பொலிஸார் வெளியிடவில்லை.

இது தொடர்பாக, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் டுவிட்டரில் கருத்து கூறுகையில், டெக்சாசில் இருந்து கிடைக்கும் தகவல்கள் வருத்தம் அளிப்பதாக பதிவிட்டுள்ளார்.

(tamilnews Santa Fe High School ten students dead shooting)

More Tamil News

முள்ளிவாய்க்கால் படுகொலை; உணர்வெழுச்சியுடன் தமிழ் ஊடகங்கள்

Tamil News Group websites :