காவிரி விவகாரத்தில் பா.ஜ.க. தமிழகத்திற்கு ஆதரவாக செயல்பட்டுள்ளது – தமிழிசை

0
417
Narendra Modi achievement enough Tamilisai Soundararajan said

Court verdict Cauvery BJP favor Tamil Nadu Cauvery case Acted

காவிரி விவகாரத்தில் பா.ஜ.க. தமிழகத்திற்கு ஆதரவாக செயல்பட்டுள்ளதாக என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான வழக்கில் இன்று இறுதி தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம், இந்திய மத்திய அரசின் திருத்தப்பட்ட வரைவு அறிக்கையை ஏற்றது.

மேலும் உடனடியாக காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

காவிரி தொடர்பான அனைத்து வழக்குகளையும் உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.

இந்நிலையில், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது, காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக பா.ஜ.க. செயல்பட்டுள்ளது.

காவிரி விவகாரத்தை கிடப்பில் போட்ட காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அரசு எவ்வளவோ விமர்சனம் செய்தார்கள். கர்நாடகாவில் பா.ஜ.க. வந்தால் நியாயமான தீர்வும் நீர் பங்கீடும் தமிழகத்திற்கு கிடைக்கும் எளத் தெரிவித்துள்ளார்.

Court verdict Cauvery BJP favor Tamil Nadu Cauvery case Acted

MORE TAMIL NEWS

TAMIL NEWS GROUP WEBSITES :