முள்ளிவாய்க்கால் படுகொலை; உணர்வெழுச்சியுடன் தமிழ் ஊடகங்கள்

0
2757

(Tamil media remembers Mullivaikkaal massacre)
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் தமிழ் பத்திரிகைகள் அனைத்தும் தமிழினப் படுகொலையான முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தினத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளன.

அத்துடன், சர்வதேச ஊடகமான பிபிசி முகப்புத்தகத்திலும் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

யாழில் இருந்து இன்றைய தினம் வெளியான தினக்குரல், உதயன், வலம்புரி பத்திரிகைகள் அனைத்திலும் முன்பக்கத்தில் முள்ளிவாய்க்கால் தினத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டன.

இன்றைய தினம் தமிழர்களின் இனப்படுகொலையின் 9 ஆவது ஆண்டு நினைவு தினம் தமிழர் தாயகப் பிரதேசத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை, படுகொலை இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் மண்ணில் வடமாகாண சபை மற்றும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Tamil media remembers Mullivaikkaal massacre