எரிபொருள் விநியோகத்தில் மோசடி; ஒரு கோடி ரூபா நஷ்டம்

0
717
Fraud fuel supply loss one crore rupees

(Fraud fuel supply loss one crore rupees)
நாட்டில் எரிபொருட்களின் விலைகள் அதிகரித்த தினத்தில், எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட மோசடியினால் இலங்கை பெற்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு ஒரு கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பெற்ரோலிய வளங்கள் அபிவிருத்தி அமைசசர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

வழமையாக எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டமை முதல் விலை அதிகரிக்கும் நேரம் வரை எரிபொருள் விநியோகிக்கப்படுவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனென்றால் குறைந்த விலையில் பெற்ற எரிபொருளை கூடிய விலைக்கு விற்பதை தடுக்கவே இந்த முறை கடைப்பிடிக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இம்முறை எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படும் என அறிவித்த நேரம் முதல் விலை அதிகரிக்கப்படும் நேரம் வரை எரிபொருள் பௌஸர்கள் 74 விநியோகிக்கப்பட்டதனால் இந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த 10 ஆம் திகதி கொலன்னாவை முனையத்தில் இருந்து 52 பௌஸர்களும், முதுராஜவெல முனையத்தில் இருந்து 22 பௌஸர்களும், எரிபொருளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதென அறிவித்த பின்னரும் எரிபொருள் விநியோகிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த மோசடி தொடர்பாக முழு விசாரணைகள் மேற்கொள்ளவுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், விசாரணைகள் முடிந்த பின்னர் நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் அறிக்கை சமர்பித்து, இதனால் ஏற்பட்ட நஷ்டப் பணத்தை இந்தச் சம்பவத்திற்கு பொறுப்பான அதிகாரிகளிடம் இருந்து மீளப்பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Fraud fuel supply loss one crore rupees