இன்றைய ராசி பலன் 16-05-2018

0
742
Today horoscope 16-05-2018

மேஷ ராசி நேயர்களே !
நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்க்கும் நாள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். வெளிவட்டாரப் பழக்கம் விரிவடையும். எதிரிகள் விலகுவர்.

ரிஷப ராசி நேயர்களே !
தேவைகள் பூர்த்தியாகும் நாள். திடீர் மாற்றம் உத்தியோகத்தில் ஏற்படலாம். நாணயமும், நம்பிக்கையும் கொண்ட நண்பர்களின் உதவி கிடைக்கும். எதிர்ப்புகளைத் தாண்டி எளிதில் முன்னேற்றம் காண்பீர்கள்.

மிதுனம் ராசி நேயர்களே !
திறமை பளிச்சிடும் நாள். திடீர் வரவு உண்டு. தந்தை வழியில் தக்க விதத்தில் உதவிகள் கிடைக்கும். தொழில்ரீதியாக புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். அரசு வழி அனுகூலம் கிடைக்கும்.

கடக ராசி நேயர்களே !
வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும் நாள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். வாகன யோகம் உண்டு. தாய்வழி உறவினர்களால் தடைகள் அகலும். பணவரவு திருப்தி தரும்.

சிம்ம ராசி நேயர்களே !
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். சிக்கனத்தைக் கையாளும் எண்ணம் மேலோங்கும். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் தோன்றி மறையும் ஒரு கடனை அடைக்க மறு கடனை வாங்கும் சூழ்நிலை ஏற்படும்.

கன்னி ராசி நேயர்களே !
ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். அன்றாடப் பணிகள் நன்றாக நடைபெற அமைதியைக் கடைப்பிடிப்பது நல்லது. மற்றவர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே வந்து சேரும்.

துலாம் ராசி நேயர்களே !
துணிவும் தன்னம்பிக்கையும் கூடும் நாள். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். மருத்துவச் செலவுகள் குறையும். தொழிலில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வீடு கட்டும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

விருச்சிகம் ராசி நேயர்களே !
அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் அனுகூலம் கிடைக்கும் நாள். அரைகுறையாக நின்ற பணிகள் முடிவடையும். நீண்ட நாளைய ஆசையொன்று நிறைவேறும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.

தனுசு ராசி நேயர்களே !
வசதிகள் பெருகும் நாள். வருமானம் திருப்தி தரும். வழக்குகள் சாதமாகும். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிக்கு மாற்றினத்தவர் வழி ஒத்துழைப்பு கிடைக்கும். சகோதர ஒற்றுமை பலப்படும்.

மகர ராசி நேயர்களே !
தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். தன்னம்பிக்கையோடு பணியாற்றுவீர்கள். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். விவாகப் பேச்சுக்கள் முடிவாவதற்கு அறிகுறி தோன்றும். உத்தியோக வாய்ப்பு கைகூடும்.

கும்பம் ராசி நேயர்களே !
பாசம் காட்டுபவர்களின் வே‌ஷம் கலையும் நாள். பணப்பிரச்சினை அதிகரிக்கும். வேலையாட்களால் மனநிம்மதி குறையலாம். செய்தொழிலில் ஏமாற்றங்களைச் சந்திக்க நேரிடும். பயணங்களில் கவனம் தேவை.

மீனம் ராசி நேயர்களே !
தன்னம்பிக்கையோடு செயல்படும் நாள். தடைகள் அகலும். கைவிட்டுப்போன பொருள் கைக்கு வந்து சேரும். கூட்டு வியாபாரம் உற்சாகத்தைக் கொடுக்கும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும்.

மேலும் பல சோதிட தகவல்கள்