(ARRahman Visit Super Singer Emotion Mother Dedication)
இசையால் உலகத்தையே கட்டிப்போடும் இந்தியாவின் தங்கமகன் என்று அனைவராலும் அழைக்கப்படும் இசைப்புயல் ரஹ்மான் விஜய் டிவியின் பிரபலமான ஷோ சூப்பர் சிங்கருக்கு கெஸ்ட் ஆக வந்திருந்தார்.
அவருக்காக விஷேசமாக செட் அமைக்கப்பட்டிருந்தது. அவருக்கு மிகப்பிரமாண்ட அளவில் வரவேற்பு கொடுக்கப்பட்டு போட்டியாளர்கள் அவருக்கு பாடல்கள் பாடி ரஹ்மானுக்கு மரியாதையை செய்தனர்.
இதற்கிடையில் போட்டியில் ஒருவர் ரஹ்மானையும் அவரின் அம்மாவையும் படமாக வரைந்து பார்ப்போரை வியப்பிலாழ்த்தியிருந்தார். இதை பார்த்த ரஹ்மான் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார்.
பின்னர் ‘எனக்கும் என் அக்காவுக்கும் எங்கள் தாய் ஒரு தாயாகவும் தந்தையாகவும் இன்று வரை முன்னின்று வழி நடத்தி செல்கிறார். அவர் இல்லை என்றால் நாம் எல்லாம் எங்கோ ஒரு மூலையில் இருந்திருப்போம்’ என்று உணர்ச்சி பொங்க கூறி முடித்தார்.
Tag: ARRahman Visit Super Singer Emotion Mother Dedication