கண்ணீரோடு வந்த பட்டதாரிகளுக்கு தண்ணீர்வீச்சு எதற்கு? யாழில் ஆர்ப்பாட்டம்

0
1143

(protest unemployed graduates Jaffna)
தமக்கான அரச நியமனத்தை வழங்குமாறு வலியுறுத்தி, யாழ். மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

யாழ். மாவட்டச் செயலகம் முன்பாக இன்று காலை 10.30 மணியளவில் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

100 க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் கலந்துகொண்டதுடன், பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

கண்ணீரோடு வந்த பட்டதாரிகளுக்கு தண்ணீர்வீச்சு எதற்கு? உரிமையைக் கேட்டால் தண்ணீர் தாக்குதலா, தொழில்வாய்ப்பு 60000 பட்டதாரிகள் 57000, அரசியல்வாதிகளே அடுத்த தேர்தல் வரும் ஞாபகமிருக்கட்டும், அபிவிருத்தி உத்தியோகத்தர் வேலைக்கு முதுமணிப் பட்டம் எதற்கு போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.

அனைத்து வேலையற்ற பட்டதாரிகளிற்கும் நியமனம் வழங்குதல் வேண்டும் எனக் கோரியும் வேலையற்ற பட்டதாரிகளின் தொழில் உரிமை போராட்டத்தில் மேற்கொண்ட நீர்வீச்சுக்கு எதிராகவும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

More Tamil News

Tamil News Group websites :

Tags; protest unemployed graduates Jaffna