(Pregnant woman killed Jaffna Bail suspects)
ஊர்காவற்துறை கர்ப்பிணிப் பெண் கொலை வழக்கில் சுமார் 17 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டடிருந்த சந்தேக நபர்கள் இருவரையும் நிபந்தனையுடனான பிணையில் விடுவிக்க யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று கட்டளை வழங்கியுள்ளது.
ஊர்காவற்துறை பகுதியில் 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் திகதி ஒரு பிள்ளையின் தாயும் ஏழு மாதக் கர்ப்பிணியுமான ஞானசேகரன் ஹம்சிகா என்ற 27 வயதுடைய பெண் கொலை செய்யபட்டார்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் சகோதர்களான இருவர் அன்றைய தினம் மாலை மண்டைதீவு சந்தியில் உள்ள ஊர்காவற்றுறை பொலிஸாரின் காவலரணில் கடமையில் இருந்த பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்கள் இருவரும் அன்றைய தினத்தில் இருந்து சுமார் 17 மாதங்களாகத் தொடர்ச்சியாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களுக்கு பிணை கோரி அவர்களின் தாயார், சட்டத்தரணி வி. திருக்குமரன் ஊடாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் பிணை விண்ணப்பம் செய்தார்.
பிணை விண்ணப்பத்தை ஆராய்ந்த யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், சந்தேக நபர்கள் இருவருக்கும் நிபந்தனையுடனான பிணை வழங்கி இன்று கட்டளை வழங்கினார்.
‘சந்தேக நபர்கள் ஒவ்வொருவரும் ஒரு இலட்சம் ரூபா பணத்தை வைப்புச் செய்யவேண்டும் என்றும் சந்தேக நபர்கள் ஒவ்வொருவரும் 5 இலட்சம் பெறுமதியான இரண்டு ஆட்பிணைகளை நீதிமன்றில் முன்னிறுத்த வேண்டும் என்றும் மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் காலை 9 மணிக்கும் நண்பகல் 12 மணிக்கும் இடையில் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிடவேண்டும் என்றும் வெளிநாடு செல்லத் தடை என்றும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கட்டளை வழங்கினார்.
More Tamil News
- இடியுடன் கூடிய மழை அதிகரிக்கும் சாத்தியம்; மக்களுக்கு எச்சரிக்கை
- நல்லூரை வந்தடைந்தது முள்ளிவாய்க்கால் தீபமேந்திய ஊர்தி பவனி
- அரசாங்க அலுவலக ஹோட்டல் உணவில் புழு; அதிர்ச்சித் தகவல்
- இரத்தக் கறைபடிந்த குமுதினிப் படகு படுகொலை; 33வது ஆண்டு நினைவு அஞ்சலி
- கிளிநொச்சியில் 13 பாடசாலைகள் அபிவிருத்தி ; தென்கொரியா நிதியுதவி
- வலி. மேற்கு பிரதேச சபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
- திடீரென தீப்பற்றிய முச்சக்கரவண்டி
- கண்ணீரோடு வந்த பட்டதாரிகளுக்கு தண்ணீர்வீச்சு எதற்கு? யாழில் ஆர்ப்பாட்டம்
- சாவகச்சேரியில் 31 மாடுகளை வெட்ட அனுமதிகொடுத்த தவிசாளர் வசமாக மாட்டினார்
- பாலித தெவரப்பெருமவிற்கு புதுப்பெயர் வைத்த விவசாயிகள்
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com
- tamilsportsnews.com
Tags; Pregnant woman killed Jaffna Bail suspects