ரயில் விபத்தில் கால்களை இழந்த ரசிகருக்கு ரஜினி உதவி!

0
313
Rajini fan legs losts feets train accident

Rajini fan legs losts feets train accident

ரயில் விபத்தில் இரண்டு கால்களையும் இழந்த ரசிகருக்கு ரஜினிகாந்த் அவர்கள் மக்கள் மன்றம் சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது,

மதுரை திருநகரைச் சேர்ந்தவர் காசி விஸ்வநாதன் (33), சென்னையில் நடந்த ரஜினியின் ‘காலா’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக சென்னைக்கு ரயிலில் வந்துள்ளார், விழாவை முடித்துவிட்டு சென்னையிலிருந்து மதுரைக்கு ரயிலில் பயணம் செய்தபோது செங்கல்பட்டு அருகே ரயில் படிக்கட்டிலிருந்து தவறி விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது, விபத்து நடந்த இடத்திலேயே ஒரு கால் ரயில் சக்கரத்தில் மாட்டி துண்டிக்கப்பட்டுவிட்டது, உடனடியாக அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது, பின்னர் அவர் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார்,

இத்தகவல் ரஜினிகாந்த் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது, அதனையடுத்து ரஜினிகாந்த் அவர்கள் மக்கள் மன்ற நிர்வாகி சுதாகரை தன் சார்பில் அனுப்பிவைத்தார்,

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காசி விஸ்வநாதனை நேரில் சென்று சந்தித்த சுதாகர் மருத்துவரிடம் அவருடைய உடல் நலம் பற்றி கேட்டறிந்தார்,

பிறகு ரஜினிகாந்த் மக்கள் மன்றம் சார்பில் நிதி உதவி வழங்கினார்…..

More Tamil News

Tamil News Group websites :