நல்லூரை வந்தடைந்தது முள்ளிவாய்க்கால் தீபமேந்திய ஊர்தி பவனி

0
719
Deepa procession 2nd day nallur mullivaikal remember day

(Deepa procession 2nd day nallur mullivaikal remember day)
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வாரத்தில் தமிழினப் படுகொலையில் உயிர் நீத்தவர்களை நினைவுகூரும் வகையில் ‘தீபமேந்திய ஊர்தி பவனி’ யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் இருந்து இன்று காலை புறப்பட்டது.

வல்வெட்டித்துறையில் மண்ணில் இருந்து நேற்று முற்பகல் 10.30 மணியளவில் பவனியை ஆரம்பித்த ஊர்தி, இன்று காலை 9 மணியளவில் நல்லூரை வந்தடைந்தது.

இளைஞர்களால் ஒழுங்கமைத்து நடத்தப்படும் தீப ஊர்திப் பவனி வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தைச் சென்றடையவுள்ளது.

தமிழினப் படுகொலையில் உயிர்நீத்த மக்களுக்கு இந்த ஊர்தியில் அஞ்சலி செலுத்துமாறு தாயக மக்களிடம் ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Deepa procession 2nd day nallur mullivaikal remember day