நேற்றைய போட்டியின் வெற்றிக்கு காரணம் இவர்தான் : கூறுகிறார் கோஹ்லி

0
144
Virat Kohli Praises Team Perfect Win vs KXIP

(Virat Kohli Praises Team Perfect Win vs KXIP)

ஐ.பி.எல்.தொடரில் பெங்களூர் அணி இம்முறை மோசமான ஆரம்பத்தை பெற்றிருந்தது.

எனினும் தற்போது தோல்விகளிலிருந்து மீண்டுள்ள பெங்களூர் அணி, பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டு பலமான அணியாக வெளிவந்துள்ளது.

இதில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில் 10 விக்கட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று, எதிரணிகளை சிந்திக்க வைத்துள்ளது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டி வெற்றிக்கும் யார் காரணம்? மற்றும் அடுத்த போட்டிகளில் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதை விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

கோஹ்லி குறிப்பிடுகையில்,

“பஞ்சாப் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான கே.எல்.ராஹுல் மற்றும் கெயில் அதிரடியான துடுப்பாட்ட வீரர்கள். அவர்களின் ஓட்டங்கள் அணியின் வெற்றியை தீர்மானிக்கும் என தெரியும்.

இதனால் ஆரம்ப விக்கட்டுகளை வீழ்த்தினால் போட்டியில் வெற்றிபெறக்கூடிய வாய்ப்பை அதிகரிக்க முடியும் என அறிந்தோம். இதன்படி எங்களது பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயற்பட்டனர்.

அதிலும் முக்கியமான உமேஷ் யாதவ் ஒரே ஓவரில் இரண்டு விக்கட்டுகளை வீழ்த்தியமை அணியை வலு பெற செய்தது. உமேஷ் யாதவ் சிறந்த பந்து வீச்சாளர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். வெற்றிக்கு முக்கிய காரணம் அவரது பந்து வீச்சுதான்.

நாம் தற்போது வெற்றிப்பாதையை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறோம். அணியின் நம்பிக்கை அதிகரித்துள்ளது.

அடுத்து நடைபெறவுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெறவேண்டும். அடுத்த போட்டி ஆரம்பிக்க இன்னும் மூன்று நாட்கள் இருக்கிறது. சிறந்த முறையில் பயிற்சிகளை மேற்கொண்டு, அடுத்த போட்டியில் வெற்றிபெறவேண்டும்” என தெரிவித்தார்.

<<Tamil News Group websites>>