பஞ்சாப் அணி படுதோல்வி! : பிளே-ஆஃப் சுற்றை தக்கவைத்தது பெங்களூர்!

0
384
royal challengers bangalore beat kings xi punjab news Tamil

(royal challengers bangalore beat kings xi punjab news Tamil)

பஞ்சாப் அணிக்கு எதிரான வாழ்வா? சாவா? போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 10 விக்கட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

இந்தூரில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பெங்களூர் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி ஆரம்பத்திலிருந்து சரமாரியாக விக்கட்டுகளை பறிகொடுத்தது. இறுதியில் 15.1 ஓவர்கள் நிறைவில் 88 ஓட்டங்களுக்கு சுருண்டது.

பஞ்சாப் அணிசார்பில் அதிகபட்சமாக பின்ச் 21 ஓட்டங்களையும், கே.எல். ராஹுல் 21 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் உமேஷ் யாதவ் 23 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளை வீழ்த்தினர்.
இந்நிலையில் இலகுவான வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய பெங்களூர் அணி விக்கட்டிழப்பின்றி 92 ஓட்டங்களை பெற்று வெற்றிபெற்றது.

பெங்களூர் அணிசார்பில் கோஹ்லி 48 ஓட்டங்களையும், பட்டேல் 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இந்த வெற்றியுடன் 10 புள்ளிகளை பெற்றுள்ள பெங்களூர் அணி பிளே-ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளதுடன், மும்பை அணியின் வாய்ப்பை தக்கவைக்கவும் உதவியுள்ளது.

<<Tamil News Group websites>>