(tamilnews no job graduates identify protest tomorow)
“அனைத்து வேலையற்ற பட்டதாரிகளுக்கும் நியமனம் வழங்குதல் வேண்டும்” என்ற வேலையற்ற பட்டதாரிகளின் தொழிலுரிமை போராட்டத்தில் மேற்கொண்ட நீர் வீச்சுக்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்பாக நாளை (16) முற்பகல் 10 மணிக்கு குறித்த கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலையற்ற பட்டதாரிகளுக்கான நேர்முகத் தேர்வுகள் அண்மையில் நடைபெற்றுள்ளது.
ஆனால், நேர்முகத் தேர்வு நடைபெற்ற அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்கள் எப்போது, எதுவரை வழங்கப்படவுள்ளது என்பது தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட தகவலை குறித்த அமைச்சு வெளியிடவில்லை.
இதன்பொருட்டு எழுத்துபூர்வமாக 35 வயதிற்கு மேற்பட்டவர்களையும், 2017 வேலையற்ற பட்டதாரிகளையும் உள்வாங்குதல் வேண்டும் எனவும் பட்ட சான்றிதழ் இறுதித் திகதியினடிப்படையிலும் அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்கள் வழங்குதல் வேண்டும் என கொழும்பில் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
இதன்போது, நீர்வீச்சு மேற்கொள்ளப்பட்டு எமது தொழில் உரிமைக்கு எதிராக செயற்பட்டமைக்காக நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது.
நேர்முகத்தேர்வில் கலந்து கொண்ட 35 வயதிற்கு மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகளின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு உரிய அமைச்சுக்கு பெயர் விபரங்கள் வழங்கப்படவுள்ளது.
அன்றைய தினம் வருபவர்களின் பெயர் விபரங்கள் மட்டுமே தம்மால் வழங்கப்படும் என வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் அறிவித்துள்ளது.
(tamilnews no job graduates identify protest tomorow)
More Tamil News
- இன்டர்போல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் நீக்கம்;கொந்தளிக்கும் சிங்கள ஊடகம்
- உயிரைப் பணயம் வைத்து தாயகம் திரும்பும் ஈழத் தமிழர்கள்
- மயிலைப் பார்க்க சென்ற சிறுவர்களுக்கு கிடைத்த மனித எச்சங்கள்
- எரிபொருள் விநியோகிக்காத 10 நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
- தலவாக்கலையில் திடீர் தீ விபத்து; வீடொன்று முற்றாகத் தீக்கரை
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டத்திற்கு யாழ். பல்கலைக்கழ நிர்வாகம் அனுமதி மறுப்பு
- ஆயிரத்திற்கும் அதிகமான நட்சத்திர ஆமைகள் மீட்பு; மூவர் கைது