லசந்த படுகொலை : புதிய தகவல்களுடன் அறிக்கை சமர்ப்பிப்பு

0
256
CID submits report new information Lasantha Wickrematunge murder

(CID submits report new information Lasantha Wickrematunge murder)
சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினர், படுகொலை தொடர்பான புதிய தகவல்களுடன் விரிவான அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.

இந்த அறிக்கை நேற்று கல்கிசை நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சமர்ப்பிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களான, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்கார மற்றும் கல்கிசை பொலிஸ் நிலைய குற்றப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி திஸ்ஸ சுகதபால ஆகியோரை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

மைத்திரியை நேரில் சந்தித்து மன்னிப்பு கோரினார் பொன்சேகா!

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :