ஆசிரியரை மிரட்டிய முதலமைச்சருக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல்

0
480
tamilnews uwa province chief minis principle human rights case

(tamilnews uwa province chief minis principle human rights case)

ஊவா மாகாண முதலமைச்சர் தன்னை முழந்தாழிட வைத்து தனது அடிப்படை உரிமைகளை மீறியதாக பதுளை தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் ஆர்.பவானி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் ஊவா மாகாண கல்வி செயலாளர் உள்ளிட்ட எட்டு பேரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டு தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் குறித்த மனுவை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாண முதலமைச்சரின் ஆதரவாளரின் பிள்ளையை பாடசாலையில் சேர்த்துக் கொள்ள முடியாது என நிராகரித்தமை காரணமாக தன்னை முழந்தாழிட வைத்து மனிதாபிமானமற்ற விதத்தில் நடத்தியதாக அதிபர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் தன்னை அச்சுறுத்தியதாகவும், இதனால் தான் முழந்தாளிட்டு மன்னிப்பு கேட்டதாகவும் அவர் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுதொடர்பில் முதலமைச்சர் மீது வழக்கு தொடரப்பட்டாலும், அதில் எந்தவொரு நீதியும் தனக்கு கிடைக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரின் செயலால் தனது அடிப்படை உரிமை மீறப்பட்டதாக தீர்ப்பு வழங்குமாறும் அதற்காக உரிய நட்டஈட்டை பெற்றுத்தருமாறும் மனுதாரரான அதிபரினால் உயர் நீதிமன்றத்தில் குறித்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

(tamilnews uwa province chief minis principle human rights case)

More Tamil News

Tamil News Group websites :