ராஜபக்ஸ குடும்பத்தை வீட்டுக்கு அனுப்பியவர்களுக்கு ஆட்சியில் இருப்பவர்கள் உதவ வேண்டும் – நவீன்

0
516
tamilnews government support srilanka public mahinda beaters

(tamilnews government support srilanka public mahinda beaters)

முறையான அபிவிருத்தி ஏற்பட்டால் நாட்டில் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்துவிடும் என்று பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தலவாக்கலையிலுள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற சித்திரம் மற்றும் பத்திரிகை கண்காட்சியை இன்று ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் இந்த கருத்தை வௌியிட்டார்.

மாணவர்களின் வாசிப்புத்திறன் மற்றும் ஆக்கத்திறனை ஊக்குவிக்கும் வகையில் ஆர்.பி.ஜயந்தவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டு நாள் கண்காட்சியில் பிரதான விருத்தினராக அமைச்சர் நவீன் திசாநாயக்க கலந்து கொண்டார்.

“மாணவர்கள் தாய் மொழி தவிர்ந்த ஏனைய மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

உலக பொது மொழியான ஆங்கில மொழிக்கு நாடளாவிய ரீதியில் 6 ஆயிரம் ஆசிரியர்கள் இருக்கின்றனர்.

ஆனால், மாணவர்கள் ஆங்கிலத்தை சாதாரண அளவிலேனும் பேசும் வகையில் வளர்ச்சியடைந்துள்ளனரா என்று அவதானிக்க வேண்டும்.

மேலும், வளமான ஆசிரியர்களை உருவாக்கும் பொறுப்பு அதிபர்களினுடையதோ, பெற்றோர்களினுடைதோ அல்ல, அது அரசியல்வாதிகளின் பொறுப்பாகும்.

உயர்தரம் கற்றவுடன் இலகுவில் தொழில் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.

அதேபோல சட்டம் அரசியல்வாதிகளுக்கு ஒரு விதமாகவும் சாதாரண மக்களுக்கு ஒரு விதமாகவும் உள்ளது.

எனக்கு அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் பட்சத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவேன் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், நாட்டில் இடம்பெற்று வந்த நீண்ட கால யுத்ததை நிறைவு செய்த மஹிந்த ராஜபக்ஷ்வையே மக்கள் வீட்டுக்கு அனுப்பியுள்ளனர்.

இது வரை காலமும் நமது மக்களின் எண்ணங்களை நாடி பிடித்து அறியமுடியவில்லை.

அதனால் நல்லாட்சி அரசாங்கம் என்ற வகையில் அதிகாரத்தில் இருப்பவர்கள் மக்களுக்கு சரியான சேவையை செய்ய வேண்டும் எனவும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

(tamilnews government support srilanka public mahinda beaters)

More Tamil News

Tamil News Group websites :