மேலதிக வகுப்பிற்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த 10 வயது சிறுமி…….!

0
229
ten years old girl death flood passara mefhavalagama

ten years old girl death flood passara mefhavalagama
பசறை மெதவலகம பகுதியில் பெய்த அடை மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட பாடசாலை மாணவி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மெதவெலகம பாடசாலையில் 5 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 10 வயதுடைய மெதவெல, எகொடகம பகுதியை சேர்ந்த நிம்சரணி ரஸ்மிதார எனும் மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை 3 மணியளவில் குறித்த மாணவி மேலதிக வகுப்பிற்கு சென்று தனது தாயுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட வெள்ளத்தினால் இவர்கள் இருவரும் இழுத்துச்செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து தாயை காப்பாற்றியுள்ளதுடன் குறித்த சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ten years old girl death flood passara mefhavalagama

More Tamil News

Tamil News Group websites :