மண்ணெண்ணெய் மானியம் வழங்கும் திகதி ஒத்திவைப்பு

0
422
minister harsha de silva criticized petrol price Lankan latest news

petrol price increase Reasoner oil date postpone June month
மண்ணெண்ணெய் மானியம் வழங்கும் திகதி பிற்போடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

நிதி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, மே மாதம் 10 திகதி முதல் வழங்கப்படவிருந்த மண்ணெண்ணெய்க்கான மானியம் ஜூன் மாதம் முதல் வழங்கப்படும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

மின்சாரம் இல்லாமல் வசிப்பவர்கள் மற்றும் மீனவர்களுக்கு இந்த மானியம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கடந்த 10 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலை அதிகரிக்கபபட்டுள்ளது.

அதன்படி ஒக்டேன் 92 ரக பெற்றோலின். விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, புதிய விலை 137 ரூபாவாகும்.

ஒக்டேன் 95 ரக பெற்றோலின் விலையும் 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுளளதோடு புதிய விலை 148 ரூபாவாகும்.

லங்கா ஒட்டோ டீசலின் விலை 14 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது, சுப்பர் டீசலின் விலை 9 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்து.

ஒரு லீற்றர் மண்ணெண்ணெய்யின் விலை 57 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

புதிய விலை திருத்தத்திற்கு அமைய மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை புதிய விலை 101 ரூபாவாக அமைந்துள்ளது.

சமுர்த்தி பயனாளிகள் தொடர்ந்தும் பழைய விலைக்கு மண்ணெண்ணையை பெற்றுக் கொள்ள முடியும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
petrol price increase Reasoner oil date postpone June month

More Tamil News

Tamil News Group websites :