முன்னணி இந்திய வீரர்களை பின்தள்ளி சாதனைப் படைத்த ரிஷப் பாண்ட்!

0
583
Indian Cricket Rishabh Pant news Tamil

(Indian Cricket Rishabh Pant news Tamil)

ஐ.பி.எல். தொடரில் நேற்று இடம்பெற்ற ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் டெல்லி அணியின் இளம் வீரர் ரிஷப் பாண்ட் அதிரடியாக ஆடி 63 பந்துகளுக்கு 128* ஓட்டங்களை குவித்தார்.

இவ்வாறு ஓட்டங்களை குவித்துள்ள ரிஷாப் பாண்ட் புதிய சாதனையொன்றையும் நிகழ்த்தியுள்ளார்.

ரிஷாப் பாண்ட் இருபதுக்கு-20 போட்டியின் ஒரு இன்னிங்ஸில் அதிக ஓட்டங்களை எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

இந்த பட்டியலின் இரண்டாவது இடத்தை முரளி விஜய் பிடித்துள்ளார். இவர் 2010ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல்.தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் 127 ஓட்டங்களை குவித்துள்ளார்.

இதற்கு அடுத்தப்படியாக சுரேஷ் ரெய்னா 126* ஓட்டங்களையும், உன்முக்ட் சந் 152 ஓட்டங்களையும், வீரேந்தர் செவாக் 122 ஓட்டங்களையும் எடுத்துள்ளனர்.

<<Tamil News Group websites>>