இரும்புத்திரைக்கு பா.ஜ.க. எதிர்ப்பு : மத்திய அரசுக்கு எதிரான வசனங்களை நீக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

0
531
movie government taken action against Central Case

movie government taken action againstt Central Case

நடிகர் விஷாலின் ‘இரும்புத்திரை’ திரைப்படத்தில் இந்திய மத்திய அரசுக்கு எதிரான வசனங்கள் இடம்பெற்று இருப்பதால் அவற்றை நீக்கக்கோரி பா.ஜ.க.வினர் சென்னை காசி திரையங்கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

நடிகர் விஷால் நடிப்பில் இன்று இரும்புத்திரை திரைப்படம் தமிழகமெங்கும் வெளியாகி திரையரங்குகளில் ஓடி வருகிறது. இதில் ஆதார் தகவல் திருட்டு, மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டங்களுக்கு எதிரான வசனங்கள் இருப்பதாக பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மேலும், திரைப்படத்தில் மத்திய அரசுக்கு எதிரான வசனங்களை நீக்கக்கோரியும் சென்னை காசி திரையரங்கம் முன்பு பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், அங்கு இரண்டு காட்சிகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

மத்திய அரசுக்கு எதிரான வசனங்களை உடனடியாக நீக்கப்படாவிட்டால் விஷால் வீட்டை முற்றுகையிடப்போவதாகவும அவர்கள் அறிவித்ததையடுத்து, விஷால் வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து நடிகர் விஷால் பேசுகையில், தமது படத்தில் தவறான தகவல்கள் எதுவும் காட்டப்படவில்லை என்றும் படத்தை பார்க்காமல் போராட்டம் நடத்தவேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, நடிகர் விஜய் நடித்த மெர்சல் படத்திலும் ஜிஎஸ்டி வரி தொடர்பான வசனங்கள் இருப்பதாகக் கூறி பா.ஜ.க.வினர் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

movie government taken action againstt Central Case

more Time Tamil News Today

Time Tamil News Group websites :