வெற்றிக்கு காரணம் இவர்தான்!!! : புகழ்ந்து தள்ளிய ரோஹித் சர்மா!

0
567
rohit sharma says mumbai indians Win vs KKR

(rohit sharma says mumbai indians Win vs KKR)

மும்பை அணியின் தலைவர் ரோஹித் சர்மா, இளம் வீரர் இசான் கிசானை பாராட்டி தள்ளியுள்ளார்.

ஐ.பி.எல். தொடரின் நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்கொண்ட மும்பை அணி 102 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது.

இந்த போட்டியில் அபாரமாக ஆடிய இசான் கிசான் 21 பந்துகளுக்கு 62 ஓட்டங்களை விளாசினார்.

இந்நிலையில் போட்டி நிறைவடைந்த பின்னர் வெற்றி குறித்து கருத்து தெரிவித்த ரோஹித் சர்மா, இசான் கிசானின் துடுப்பாட்டத்தை பாராட்டியுள்ளார்.

ரோஹித் சர்மா குறிப்பிடுகையில்,

“அணியாக ஒன்றினைந்து வெற்றிபெற்றதில் மகிழ்ச்சி. இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் இசான் கிசானின் அதிரடி துடுப்பாட்டம்.

முதல் 10 ஓவர்களில் அணியின் ஓட்ட எண்ணிக்கை குறைவாக இருந்தது.

எனினும் இசான் கிசான் மைதானத்துக்கு வருகைத்தந்த பின்னர் அதிரடியாக ஓட்டங்களை குவித்தார். போட்டியில் அதிரடியாக ஓட்டங்களை குவிப்பது இலகுவான விடயம் அல்ல. ஆடுகளத்தை பொருத்தவரையில் ஓட்டங்களை குவிப்பதில் சிரமங்கள் இருந்தது. எனினும் கிசான் சிறந்த முறையில் துடுப்பெடுத்தாடினார்.

வெற்றியின் அனைத்து பெருமையும் இசான் கிசானையே சாரும். கடந்த சில போட்டிகளில் கிசானின் திறமையை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனினும் இன்று (நேற்று) வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக்கொண்டார். அதுமட்டுமல்லாமல் பென் கட்டிங்கின் ஆட்டமும் அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

<<Tamil News Group websites>>