ராணுவ ரீதியாக எங்களை எந்த நாடும் மிரட்ட முடியாது – ஈரான்

0
628
cant threaten country militarily Iran Tamil news

ராணுவ பலத்தை வைத்து எங்களை எந்த வெளிநாடும் மிரட்ட முடியாது என ஈரான் ராணுவ மந்திரி அமிர் ஹட்டாமி குறிப்பிட்டுள்ளார்.

சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள சன்னி போராளிகளை தாக்கி, ஒடுக்கி, அழிப்பதில் இஸ்லாமிய ராணுவம் என்றழைக்கப்படும் ஈரான் நாட்டு ராணுவம் வெற்றி பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ள அமிர் ஹட்டாமி, ’எங்கள் நாட்டை தற்காத்து பாதுகாக்க தேவையான சக்தி பெற்றதாக இஸ்லாமிய ஈரானின் பலம் இன்று அமைந்துள்ளது. ராணுவ பலத்தை வைத்து எங்களை எந்த வெளிநாட்டு சக்தியும் மிரட்ட முடியாது’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் நாட்டுடன் செய்துகொண்ட அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்துள்ள நிலையில் ஈரான் ராணுவ மந்திரி அமிர் ஹட்டாமி தெரிவித்துள்ள இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

(cant threaten country militarily Iran Tamil news)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :