ஏன் அவ்வாறு நடந்துகொண்டேன் என தெரியுமா? : நீதிமன்றில் அறிவித்தார் ரயில் ஊழியர்

0
3855
Jaffna train attendant harassed Tamil woman racially abused reason

(Jaffna train attendant harassed Tamil woman racially abused reason)
புகையிரதத்தில் மூன்றாம் வகுப்பு ஆசனத்துக்கு கட்டணம் செலுத்திவிட்டு இரண்டாம் வகுப்பு ஆசனத்தில் அமர்ந்திருந்ததாலேயே பெண் பயணியிடம் ரயில்வே ஊழியர் முரண்பட்டாரே தவிர அவர் பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற விடயம் தவறானான ஒர் சோடிப்பு என புகையிரத ஊழியர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி றெமிடியஸ் மன்றில் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற புகையிரதத்தில் பயணித்த பிரிட்டன் வாழ் குடும்பபப் பெண்ணுடன் தகாத முறையில் நடந்துகொண்ட ரயில்வே ஊழியர், யாழ்ப்பாணம் பொலிஸாரால் நேற்று முன்தினம் மதியம் கைது செய்யப்பட்டார்.

அவர் விசாரணைகளின் பின்னர், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்றைய தினம் பிற்பகல் முற்படுத்தப்பட்டார்.

இதன்போது பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் ரயில்வே ஊழியருக்கு எதிராக முதல் அறிக்கையை பொலிஸார் மன்றில் சமர்ப்பித்தனர்.

இதன்போதே சந்தேகநபரின் மேற்படி விடயத்தை மன்றுக்கு சுட்டிக்காட்டிய சட்டத்தரணி அவரைப் பிணையில் விடுவிக்க விண்ணப்பம் செய்தார். இதனை ஆராய்ந்த நீதிவான், சந்தேகநபரை ஒரு இலட்சம் ரூபா ஆள் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.

https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/2018/05/08/namal-slams-harassment-of-tamil-by-attendant-on-jaffna-train/

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :

Tags:Jaffna train attendant harassed Tamil woman racially abused reason, Jaffna train attendant harassed Tamil woman racially abused reason